Skip to content
இலவச ஆலோசனைFree consultation
உங்கள் உரிமைகள்Your rights

கடன் இருந்தாலும், உங்கள் மரியாதை உங்களுடையது.You owe money. You don't owe your dignity.

ரெக்கவரி தொல்லை, லோன் ஆப் மிரட்டல் — உங்கள் உரிமைகளும், புகார் செய்யும் வழிகளும், எளிய தமிழில்.Recovery harassment and loan-app threats — your rights and how to complain, in plain words.

8 AM – 7 PM

ரெக்கவரி அழைப்புகளுக்கான நேரம்The only hours for recovery calls

தொட்டுப் பாருங்கள்Tap to read →

நேரம் மட்டுமல்ல, மரியாதையும்Not just timing — dignity

ஏஜென்ட்கள் அடையாள அட்டை, வங்கியின் அங்கீகாரக் கடிதம் காட்ட வேண்டும். மிரட்டல், தகாத வார்த்தைகள், பொது அவமானம் — RBI விதிகளுக்கு எதிரானவை.Agents must show ID and the lender's authorisation. Threats, abuse and public shaming are against RBI rules.

0

உங்கள் குடும்பம், நண்பர்கள், அலுவலகத்துக்கு அழைப்புகள்Calls allowed to your family, friends or office

தொட்டுப் பாருங்கள்Tap to read →

உங்கள் கடன், உங்கள் தனிப்பட்ட விஷயம்Your debt is your private matter

உங்கள் அனுமதியின்றி உறவினர்கள், அண்டை வீட்டார், நண்பர்கள், அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளக் கூடாது. லோன் ஆப்கள் உங்கள் contacts-ஐப் பயன்படுத்தக் கூடாது.Without your consent, they must not contact relatives, neighbours, friends or your employer. Loan apps must not use your contact list.

30

நாட்கள் — வங்கி உங்கள் புகாருக்குப் பதில் தரdays — for the lender to answer your complaint

தொட்டுப் பாருங்கள்Tap to read →

பிறகு RBI ஒம்பட்ஸ்மேன்Then, the RBI Ombudsman

வங்கி 30 நாட்களில் பதில் தரவில்லை அல்லது திருப்தி இல்லை என்றால், cms.rbi.org.in-இல் இலவசமாகப் புகார் செய்யலாம். வழக்கறிஞர் தேவையில்லை.If the lender doesn't reply in 30 days, or you're not satisfied, complain free at cms.rbi.org.in. No lawyer needed.

1930

சைபர் கிரைம் உதவி எண்National cyber-crime helpline

தொட்டுப் பாருங்கள்Tap to read →

லோன் ஆப் மிரட்டலா?Threatened by a loan app?

மாற்றப்பட்ட புகைப்படங்கள், contacts-க்கு மெசேஜ், மிரட்டல் — 1930 அழைக்கவும் அல்லது cybercrime.gov.in-இல் புகார் செய்யவும். screenshots சேமித்து வையுங்கள்.Morphed photos, messages to contacts, threats — call 1930 or report at cybercrime.gov.in. Keep screenshots.

ரெக்கவரி ஏஜென்ட்கள் — செய்யலாம் / செய்யக் கூடாதுRecovery agents — what they can and can't do

செய்யலாம்They mayசெய்யக் கூடாதுThey must not
காலை 8 – இரவு 7 மணிக்குள் அழைக்கலாம்Call between 8 AM and 7 PMமிரட்டுவது, தகாத வார்த்தைகள் பேசுவதுThreaten you or use abusive language
நிலுவை பற்றி எழுத்துப்பூர்வ நோட்டீஸ் அனுப்பலாம்Send written notice of duesஉங்கள் குடும்பம், நண்பர்கள், அலுவலகத்தைத் தொடர்பு கொள்வதுContact your family, friends or employer
அடையாள அட்டை, அங்கீகாரக் கடிதத்துடன் வரலாம்Visit with ID and the lender's authorisation letterபொது இடத்தில் அல்லது சமூக வலைதளத்தில் அவமானப்படுத்துவதுShame you in public or on social media
சரியான நிலுவைத் தொகையை விளக்கலாம்Explain the correct amount dueஉங்கள் contacts, புகைப்படங்கள், இருப்பிடத்தைப் பயன்படுத்துவதுUse your contacts, photos or location

ஆதாரம்: RBI-யின் ரெக்கவரி ஏஜென்ட்கள் மற்றும் Fair Practices Code வழிகாட்டுதல்கள், டிஜிட்டல் கடன் வழிகாட்டுதல்கள். சமீபத்திய விதிகளுக்கு rbi.org.in பார்க்கவும்.Source: RBI guidelines on recovery agents, the Fair Practices Code, and the Digital Lending guidelines. See rbi.org.in for the latest rules.

புகார் செய்வது எப்படி — 3 படிகள்How to complain — 3 steps

  1. கடன் வழங்குபவரிடம் எழுத்துப்பூர்வ புகார்Written complaint to the lender
    வங்கி / NBFC-யின் குறைதீர் அதிகாரிக்கு (Grievance Redressal Officer) மின்னஞ்சல் அனுப்புங்கள். தேதி, நேரம், அழைத்த எண், screenshots சேர்க்கவும். ஒப்புகை எண்ணைச் சேமிக்கவும்.Email the bank/NBFC's Grievance Redressal Officer. Include dates, times, the calling numbers and screenshots. Save the acknowledgement number.
  2. RBI ஒம்பட்ஸ்மேன் — இலவசம்RBI Ombudsman — free
    30 நாட்களில் பதில் இல்லை அல்லது திருப்தி இல்லை என்றால், cms.rbi.org.in-இல் புகார் செய்யுங்கள். வழக்கறிஞர் தேவையில்லை.If there's no reply in 30 days, or you're not satisfied, complain at cms.rbi.org.in. No lawyer needed.
  3. மிரட்டல் / சைபர் குற்றம்Threats / cyber crime
    உடல் ரீதியான மிரட்டலுக்கு அருகிலுள்ள காவல் நிலையம். லோன் ஆப் மிரட்டல், மாற்றப்பட்ட புகைப்படங்களுக்கு 1930 அல்லது cybercrime.gov.in.For physical threats, your nearest police station. For loan-app threats or morphed photos, call 1930 or report at cybercrime.gov.in.
முக்கியம்: உரிமைகள் தெரிந்துகொள்வது கடனைத் தவிர்ப்பதற்காக அல்ல. உண்மையான கடனை நியாயமான முறையில் தீர்க்கவே. அதற்கு நாங்கள் உதவுகிறோம்.Important: knowing your rights isn't about avoiding a genuine debt. It's about resolving it fairly. That's where we help.

இந்தப் பக்கம் பொதுவான தகவல் மட்டுமே; சட்ட ஆலோசனை அல்ல.This page is general information, not legal advice.

முதல் அடிThe first step

இந்த இரவுக்குப் பிறகும் ஒரு காலை உண்டு.There is a morning after this night.

25 நிமிட இலவச உரையாடல். எந்தக் கட்டாயமும் இல்லை. உங்கள் விவரங்கள் ரகசியமாக இருக்கும்.A free 25-minute conversation. No obligation. Everything you share stays confidential.

WhatsAppஅழைக்கCall